By Harini Dineshkumar
தஞ்சை கீழவாசலில் உள்ள பழைய மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அரசு பள்ளியின் வாயிலில் கழிவு நீர் ஓடுவதால், மழைக்காலங்களில் மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்கள் பரவும் அபாயம் உள்ளது.
கழிவுநீர் ஓடும் பாதைக்கு அருகில் உள்ள சுவற்றில் ஓவியம் வரையும் பணி நடைபெறுகிறது.
இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கலாம் என்று அரசு அறிவித்ததையொட்டி, இப்பள்ளியின் சுவற்றில் ஓவியம் வரையும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சின்னக்கடை தெரு அரசு நடுநிலைப்பள்ளியின் நுழைவாயில்
இதையடுத்து ஊரடங்கு காலங்களில் மாநகராட்சியில் இருந்து குப்பை சேகரிக்கும் வண்டிகள் வராத காரணத்தினால், பள்ளியைச் சுற்றியுள்ள மக்கள் பள்ளியின் சுவற்றிற்கு மிக அருகில் நெகிழி குப்பைகளை கொட்டியுள்ளனர். அக்குப்பைகளை ஆடு மாடுகள் போன்ற உயிரினங்கள் உண்பதால், அவை இறந்து போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்விடத்தில் நெகிழிக் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. இக்குப்பைகளை எரிப்பதால் வெளிவரும் புகையினை சுவாசிப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அவ்விடத்தில் வாழும் மக்களுக்கும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் புற்று நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்களுக்கு அழகாய் ஓவியங்கள் வரைந்து மாணவர்களை ஈர்ப்பதைவிட மாணவர்களின் சுகாதாரமும் அவர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளி நிர்வாகம் சுவற்றில் வண்ண ஓவியங்கள் வரைவதற்காக செலவிடும் பணத்தை குப்பைகள் மற்றும் கழிவுகளை சுத்தப்படுத்த பயன்படுத்தினால் மாணவர்கள் மற்றும் அச்சுற்றுவட்டாரத்தில் தங்கியுள்ள பலரின் சுகாதாரத்தை பேணி காக்க இயலும். அத்தோடு நில்லாமல் பல உயிர் கொள்ளும் நோய்களை தடுக்க இயலும்.
Photo Credits: Harini Dineshkumar
No responses yet