நாட்டின் முதல் உணவு அருங்காட்சியகம்- பெருமை கொள்கிறது நெற்களஞ்சியம்


எ. சுரேகா


நாட்டின் முதல் உணவு பாதுகாப்பு அருங்காட்சியகம் நெற்களஞ்சியமான தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது இதை மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலிக் காட்சி மூலம் இந்த அருங்காட்சியகத்தை துவக்கிவைத்தார்.இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இது நமது தஞ்சைக்கு மற்றுமொரு பெருமையை சேர்த்துள்ளது.

இந்திய உணவு கழகம் நமது நாட்டில் முதன்முதலாக உணவு அருங்காட்சியகத்தை தஞ்சையில் தான் உருவாக்கியுள்ளது.1965ஆம் ஆண்டு உணவுக் கழகம் நமது தஞ்சாவூரில் தான் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த உணவு பாதுகாப்பு அருங்காட்சியகத்தை பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழிலாக மற்றும் தொழில்நுட்ப அருட்காட்சியகம் அமைப்பு இணைந்து உருவாக்கி உள்ளது.இதன் மொத்த மதிப்பு ரூ. 1.10 கோடி மற்றும் அதன் பரப்பளவு 1,860 சதுரம் அடியில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆகும்.

இந்த அருங்காட்சியகம் உணவு கருப்பொருள் அடிப்படையிலானது . பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கு இடைப்பட்ட கற்காலம் சார்ந்த இடைப்பட்ட கற்காலம் சார்ந்த (மீசோலித்திக்) காலத்தில் உணவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை பல்வேறு சேமிப்பு முறைகள் மட்டும் ஆரம்பகாலம் மனிதன் அருங்காட்சியகம் எதிர்கொண்ட சவால்கள் வரை பகிர்ந்து கொள்கிறது.

இந்த உணவு அருங்காட்சியகம் இந்திய உணவுகளின் வரலாறு மற்றும் இந்திய உணவுக் கழக வரலாறு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு முதலியவற்றை காட்சிப்பொருளாக உள்ளடக்கியுள்ளது.இந்தியாவில் பயன்படுத்தப்படும் உணவுகள் பலவற்றையும் இந்திய வரைபடத்தில் வரைந்திருந்தனர்.

தானியங்கள், பழங்கள், பயிர்களைத் தாக்கக்கூடிய பூச்சிகள், விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கான பொருள்கள் போன்றவையும் அமைத்திருந்தனர். இந்திய உணவுக் கழகத்தில் செயல்பாடுகளை விளக்கும் வகையிலான புரொஜெக்சன் மேப்பிங், டச் ஸ்கீரின் கியோஸ்க், ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் போன்ற நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு சென்றால் நாம் நடவு முதல் அரிசி கைக்கு வரும்வரை என்னென்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் மற்றும் கற்கால மனிதன் உணவு தேவையை எவ்வாறு பூர்த்தி செய்து கொண்டான் என்றும் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம்

Edited by: செ. கவுதமன்

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Comments

No comments to show.