பஞ்சத்தின் போதும் வீணடிக்கப்படும் நெல்மணிகள்

த.த்ரிஷா

உலகப் பசி குறியீட்டுத்  தரவரிசையில், இந்தியா, ‘குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்'(The Global Hunger Index)வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 101 ஆவது இடத்தில் உள்ளது. விளைவிக்கப்பட்ட நெல்மணிகளைச் சரிவர சேமித்து வைக்கப் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக, 100 குவிண்டால் அளவிலான நெல்மணிகள், வரப்புகளிலும் ஆங்காங்கே சாலையோரங்களிலும், மழை நீரினாலும், வீணாவதோடு கால்நடைகள் மற்றும் புழு பூச்சிகளினாலும் வீணடிக்கப்படுகின்றன.

வழக்கமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவில் நெல் விளைச்சல் இருந்தாலும், நெல் கிடங்குகளில் போதிய இட வசதி இல்லாததாலும் நெல் கொள்முதலில், தாமதம் நிலவுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்..இதனால் சாலையோரங்களிலும், பள்ளி விளையாட்டு திடல்களிலும், நெல்மணிகள் குவியல் குவியலாக குவிக்கப்பட்டு வருவதனால் மழையில் சேதமடைகின்றன. கடந்த சில காலங்களாகவே கொரோனா காரணமாக விவசாயிகள் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளனர். இந்நிலையில் தாங்கள் அறுவடை செய்த நெல்லினை கொள்முதல் செய்ய இயலாது தவிக்கின்றனர். எனவே இதனைக் கருத்தில் கொண்டு. அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நெல்லினை உடனே கொள்முதல் செய்ய முற்படவேண்டும்.

“மாறிவரும் பருவ நிலைக்கேற்ப தங்களுக்கு முன்கூட்டியே விளைப்பொருட்களை பாதுகாக்க வழிவகைச் செய்வது மட்டுமல்லாமல், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக அமைக்க வேண்டும்,”என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Edited by: செ.கௌதமன்

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Comments

No comments to show.