By Harini Dineshkumar
அதிவேகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக உருவாகிக்கொண்டிருக்கும் நெற்களஞ்சியம். வணிக வளாகம், ராணீஸ் நினைவு கோபுரம், உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து புதிதாக பாலங்கள் கட்டப்பட்டு, தஞ்சை பழைய பேருந்து நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெற்களஞ்சியத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியின் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம்
புதுப்பிக்கப்பட்ட தஞ்சை வணிக வளாக கட்டடம்
புதுப்பிக்கப்பட்ட தஞ்சை ராணீஸ் நினைவு கோபுரம்
இக்கோபுரம் 1883 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்பொழுது தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக உருமாறிக் கொண்டிருக்கும் திட்டத்தின் கீழ் இது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் முதலாம் உலகப்போரில் தஞ்சையில் இருந்து கலந்துகொண்ட வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பிக்கப்பட்ட ராணீஸ் கோபுரம் அமைந்துள்ள ராஜப்பா பூங்கா
இக்கோபுரத்தை சுற்றி ராஜப்பா பூங்கா என்ற பெயரில் பூங்கா ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் உலாவும் வகையிலும் சிறுவர் சிறுமியர் விளையாடும் வகையிலும் இது அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இப்பூங்காவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ராஜப்பா பூங்காவின் வெளிப்புற சுவரில் குப்பைகள் எரிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட சேதங்கள்
இத்தனை சிறப்பு கொண்ட இக்கோபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பூங்கா புதுப்பிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து சேதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. நகரத்தை தூய்மை செய்யும் பணியாளர்கள் குப்பைகளை சரியாக அப்புறப்படுத்தாமல் புதுப்பிக்கப்பட்ட ராஜப்பா பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதையில் குப்பைகளை எரிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொது இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மூலமாக பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்
இதையடுத்து நமது நெற்களஞ்சியத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் நமது தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் ரூபாய் 1.1 கோடி செலவில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credits: Harini Dineshkumar
No responses yet