By Harini Dineshkumar
தற்போதைய காலகட்டத்தில் தங்க நகைகளை வாங்குவதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகைகள் வாங்க வேண்டுமென்றால் மக்கள் பிரபலமான பிரம்மாண்டமாக நகை கடைகளை நாடுவது வழக்கம். தற்போதைய காலகட்டத்தில் புதிதாக பல வடிவமைப்புகளில் இயந்திரங்கள் மூலமாக நகைகள் செய்யப்படுகிறது.
ஆனால் நாற்பத்தி ஐந்து வருடங்களாக அனைத்து விதமான நகைகளையும் தனது கைகளால் பழங்கால முறைகளை பயன்படுத்தி செய்து வருகிறார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா ?
பணியில் ஈடுபட்டிருக்கும் கார்த்திகேயன்
ஆம், கார்த்திகேயன் என்ற 55 வயது மதிக்கத்தக்கவர் கடந்த 45 வருடங்களாக அனைத்து விதமான நகைகளையும் பழங்கால முறைகளை பயன்படுத்தி வடிவமைத்து வருகிறார்.
அத்தோடு நில்லாமல் தஞ்சை காசு கடைத் தெருவில்
‘முத்து டை அண்ட் டைமன் கட்டிங் வொர்க்ஸ்’ என்ற கடை நடத்தி வருகிறார். இக்கடை கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் சேகரித்து இருக்கும் அச்சின் மாதிரிகள்
“என்னிடம் அனைத்து விதமான நகை செய்யும் அச்சுக்கள் உள்ளன. தஞ்சையிலே என்னிடம் தான் அனைத்து அச்சுகளும் உள்ளன. பெரிய தனியார் நகைக்கடைகள் கூட என்னிடம் வந்து நகைகள் வடிவமைத்து செல்வார்கள்” என்று பெருமிதம் கொள்கிறார் ‘முத்து டை அண்ட் டைமன் கட்டிங் வொர்க்ஸ்’ உரிமையாளர் கார்த்திகேயன்.
தாலியில் கோர்க்கும் காசுகள் வடிவமைப்பதற்கான அச்சு
நவீனமாக மாறிவரும் இவ்வுலகத்தில் இன்னும் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் சில மனிதர்கள் வாழ்வது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகத்தான் உள்ளது.
Photo Credits: Harini Dineshkumar
No responses yet