இரண்டு வயதிலே தன் வெற்றிப் பாதையைச் செதுக்கத் துவங்கிய சிறுமி

தி. சம்யுக்தா

கேரளாவைச் சேர்ந்த இரண்டு வயது மழலை சாகித்யா, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ், 2021 -ல் இடம்பெற்றுள்ளர். “எல்லா குழந்தைகளுக்கும், ஏதோ ஒரு வகையில் திறமை இருக்கும். அவர்களின் திறமையை வெளியில் கொண்டுவர வைப்பது பெற்றோர்களின் கடமையாகும்,” மழலை மேதையின் தாய் நிஷாந்தி கூறுகிறார். 

50 உலக நாடுகள்; அவற்றின் தலைநகரங்கள், கொடிகள், உலக கண்டங்கள், இந்தியாவின் தலைவர்கள் போன்ற பல தகவல்களை மனனம்  செய்து சொல்கிறார், இரண்டு  வயதேயான சிறுமி சாகித்யா, கேரளாவின் பாலக்காடு மாவட்டம், கம்பிளிச்சுங்கம், நல்லேப்பிள்ளியைச்  சேர்ந்தவராவார்.

மேலும், ஆங்கில மாதங்கள், தமிழ் மாதங்கள், வாரங்கள், ஆங்கில எழுத்துக்கள் ஆகிய இவை அனைத்தையும்,  நொடி பொழுதில்  சொல்லி விடுகிறார். தற்போது, மழலை மொழியில் தேசிய கீதத்தையும் பாடி வருகிறார். 

“சாகித்யா, மற்றவர் பேசுகையில் அதனை உற்று கவனித்துக் கொண்டிருப்பாள். நாங்கள் பேசும் அவ்வாக்கியங்களை பிழை இல்லாமல் திரும்பச் சொல்வாள். இடங்கள், பொருட்களின் பெயர்களை அவளிடம் இரண்டு முறை சொன்னால் போதும், மனப்பாடம் செய்து விடுவாள்.

500 வாக்கியங்களைக் கொண்ட ஆங்கிலப் புத்தகத்தை அவளுக்கு பரிசளித்தோம். தினமும் இரு முறையாவது புத்தகத்தைப் புரட்டி பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தாள்.”,என்று சிறுமியின் பெற்றோர் பெருமிதத்துடன் கூறுகின்றனர். 

சாகித்யாவின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பின்பு, தினமும் 2 நாடுகளின் பெயர்கள், தலைநகரம், கொடி போன்ற தகவல்களை சொல்லிக் அவரது பெற்றோர் சொல்லிக் கொடுத்துள்ளனர். காட்டு விலங்குகள், பழங்கள் , எண்கள், காய்கறிகள், நாட்டின் பெயர்கள், கொடிகள் போன்றவற்றின் படங்களை காட்டியிருக்கின்றனர். சில நாட்களுக்குப்  பின்னர் சிறுமி தானாகவே முன்வந்து அவற்றின் பெயரைக் கூறத் துவங்கியுள்ளார். 

சாகித்யாவின் நினைவாற்றல், கவனிக்கும் விதம் , உள்வாங்கும்  திறன், ஆகியவற்றை அறிந்ததும்  அவரை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் அவரது பெற்றோர் அவர் விரும்பாத எதனையும் எள்ளளவும் அவரிடம் திணிக்க முற்படுவதில்லை. சாகித்யாவின் திறமைக்கான அங்கீகாரம் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மூலம் கிடைத்ததன் வழியாக அதனைப் பார்த்த பலரும்  சிறுமியைப் பாராட்டி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், சாகித்யாவைப் பாராட்டி  ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Comments

No comments to show.