வெ. ஜனனி
சுயமாகத் தொழிலைத் துவங்குவதற்கு, வயது ஒரு தடை இல்லை. நம்மால் முடியும் என்ற எண்ணமும் , கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தால், எதிலும் சாதிக்கலாம் என்பதற்குச் சான்றாக நிற்கிற பெண்மணி தான், திருப்பூரைச் சேர்ந்த திருமதி. சோமா மண்டல்.

கேரமல் சாக்லேட்
சாக்லெட் உற்பத்தி செய்யும் தொழிலை ஆரம்பித்த ஓராண்டுக்குள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் டெலிவரி செய்கிறார்.அணைத்து வயதினருக்கும் பிடித்தது சாக்லெட் , பெயரை சொல்லும்போதே நாவிலும், நினைவிலும் சுவையூட்டச் செய்யும் தன்மை கொண்டது. உலகம் முழுவதும் சாக்லெட்டிற்கு இரசிகர்கள் உண்டு. பல பெண்கள் சாக்லெட் தயாரிப்பைத் தொழிலாக செய்து வருகிறார்கள். அவர்களின் வித்தியாசமாக சிந்தித்து அதனைச், செயல்படுத்தி வெற்றி கண்டவர், சோமா மண்டல்.
வாழக்கையில் நினைத்து பார்க்க முடியாத கஷ்டங்களை சந்திக்கும் போது நீ எடுக்கும் முடிவில் தான் உன் வரலாறு உருவாகிறது-இந்த வாக்கியத்திற்கு ஏற்றவாறு சோமா மண்டல் தனது கால் தடத்தை சாக்லேட் தொழிலில் பதித்து உள்ளார்.

சாக்லேட் ஃப்ரீக் ஷேக்
ஒரு தொழில் முனைவராக தனது வெற்றிப் பயணத்தைப் பற்றி நம்மிடம் விவரிக்கின்றார்:
“எனது பூர்விகம் கொல்கத்தா. 30 வருடங்களுக்கு முன்பு, கணவரது பனி நிமித்தமாக திருப்பூரில் குடியேறினோம். மகன் , மகள்களுக்குத் திருமணம் நடந்த பின்பு , பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக சென்னையில் குடியேறினேன். குழந்தைகள் அடிக்கடி சாக்லேட் கேட்டு அடம்பிடிப்பார்கள். கடைகளில் வாங்கிக் கொடுக்காமல், யு டியூப்பில் பார்த்துக் சாக்லேட் செய்முறையை கற்றுக் கொண்டு வீட்டிலேயே சாக்லேட் செய்து கொடுப்பேன். அதை பார்த்து அக்கம்பக்கம் வீட்டார் அவர்களுக்கும் செய்து கொடுக்கும்படி கேட்டனர், நானும் செய்து கொடுத்தேன்.
பொதுமுடக்க காலத்தில், தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே இருந்தது ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது. எனவே சாக்லேட் தயார் செய்வதை, தொழிலாக எடுத்துச் செய்யும் எண்ணத்தை என் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். வீட்டில் அதற்கென இடம் அமைத்து கொடுத்தனர். கடந்த ஜூன் மாதம் தொழிலை தொடங்கினேன்.
லாக்டவுன் சமயத்தில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால், பிராண்டிங் செய்யும் வேளைகளில் ஈடுபட்டோம். அப்போதுதான் சாக்லெட்டில் புகைப்படங்களை அச்சிடுவது குறித்து குடும்பத்தினரிடம் கூறினேன். ஒரு மாதம் குறைந்த பட்சமாக 50 முதல் 75 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் எனவும் அதில் நல்ல லாபம் வருகிறது என்று கூறினார். இவரது தொழிலை டிஜிட்டல் கடையில் கூடிய விரைவில் சாக்லேட் விற்பனை தொடங்க உள்ளோம் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.
அதன்படி சாக்லெட் பேக்கிங்கில் சில மாற்றங்களை செய்தோம். பெட்டியிலும் புகைப்படங்களை அச்சிட்டதில் அதன் தோற்றமே சாக்லெட்டுகளைத் தவிர்த்து, புதிதாக 15 வகைகளும், புகைப்படங்கள் அச்சிட்ட பினாட்டா சாக்லேட் கேக்கும் அறிமுகப்படுத்தினோம்.
இராசாயனமில்லா முறையில் தயாரிக்கப்படும், இந்த வகையான சாக்லேட்டுகள் உடல் மற்றும் மூளையை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நாட்களில் ராசாயனம் நிறைந்த உணவுகளை குழந்தைகள் உண்டு வருவதால் உடல் சோம்பல் மற்றும் மூளை சுவாத்தியமான பிரதேசத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. இதற்கான தீர்வாக எனது சாக்லேட் ஒரு மருந்தாக இருக்கும் என கூறினார்.
பிராண்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், நடிகர் , நடிகைகள் பலருக்கும் எங்களது சாக்லெட்டை அனுப்பி வைத்தோம். ஒவ்வொருவரும் அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் , தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்”.
குடுபத்தினரின் ஒற்றுழைப்பு இருந்தால் இல்லத்தரசியர் யாவரும் தொழிலதிபர்களாகலாம். குடும்பப் பொறுப்புகளுடன் சேர்த்து தனக்கே உரிய ஏதேனும் ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு அதில் முன்னேறிச் செல்லவும் முடியும். இதுக்கு சாக்லேட் தொழிலில் தடம் பதித்த திருப்பூரை சேர்ந்த திருமதி. சோமா மண்டல் ஒரு உதாரணமாக விளங்குகிறார்.
புகைப்படங்கள்:வெ. ஜனனி
Edited by:
தி. சம்யுக்தா, ரி ரியூஜிலீன்.
No responses yet