நெற்களஞ்சியத்தை சுற்றி 70க்கும் மேற்பட்ட ஜீவசமாதிகள்…

By Harini Dineshkumar

 நம்மில் பலர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமி, ஜீவசமாதி அடைந்ததை அறிந்திருப்போம். அதற்காக வருடத்திற்கு ஒரு முறை தியாகராஜர் ஆராதனை நடப்பதையும் நாம் கேள்வியுற்று இருப்போம்.  ஆனால், நம்  தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில், கரந்தை என்னுமிடத்தில் 70க்கும் மேற்பட்டோர் ஜீவசமாதி  அடைந்துள்ளார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டவர்கள்  தஞ்சையில் உள்ள கரந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குறிப்பாக ராஜ கோரி  என்னும்  சுடுகாடைச் சுற்றிப் பலர் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

ராஜ கோரி சுடுகாடு

அதில் ஒருவர்தான் பஞ்சநத சித்தர். ஏறத்தாழ,  70 வருடங்களுக்கு முன்னர்  ராஜ கோரி  சுடுகாட்டிற்கு அருகில் வந்து  அங்கிருந்த வெட்டியானிடம் குழி தோண்ட  கூறியுள்ளார்.  அவ்வெட்டியான் எதற்காக என்று வினவ. தான் முக்தி அடைந்து விட்டதாகவும் ஜீவசமாதி அடைய போவதாகவும் இறைவனிடம் இரண்டறக் கலக்க போவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பாத  அவ்வெட்டியான் முதலில் குழி தோண்ட மறுத்துள்ளார். பின்பு  பஞ்சநத சித்தர் அவனிடம்   ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அவ்விடத்தில்  தோண்டினால் அச்சு வெல்லம் வருமென்று கூறியுள்ளார். பின்பு, அதேபோல் நடந்ததும்  வெட்டியான்  அவரிடம் கூறியபடியே குழி தோண்டினார். அதில் அமர்ந்து கொண்ட பஞ்சநத சித்தர் தியான நிலைக்கு சென்ற பிறகு அந்த குளியை மூடிவிட்டான்.

பஞ்சநத சித்தரின் ஜீவசமாதி

அதன்மேல்  ஐந்தடி உயரத்தில்  ஒரு சிறிய அரை எழுப்பி  அதனுள் பஞ்சநத சித்தரின் சிறிய ஓவியம் ஒன்றை வைத்து கொஞ்சம் திருநீறும் ஒரு விளக்கு ஏற்றி வைத்துள்ளனர்.

பஞ்சநத சித்தரின் ஓவியம்

 அந்த அறையினுள் இங்கே ஒளி வழிபாடு செய்ய வேண்டும் என்றும் ஆடம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இங்கு காணிக்கை செலுத்தக் கூடாது என்றும் எழுதியுள்ளார்கள். 

பஞ்சநத சித்தரின் ஜீவசமாதியின் உட்புறம் அறையின் வடிவமைப்பு

   இதேபோல் அதற்கு மிக அருகில் நேபாளத்தை ஆண்ட மன்னர் ஒருவர் ஜீவசமாதி அடைந்துள்ளதாகவும் பல சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதாகவும் திரு ராகவேந்திர சுவாமிகள் உட்பட பலர் ஜீவசமாதி அடைந்துள்ளதாகவும்  கூறப்படுகிறது. இதேபோல் கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட ஜீவசமாதிகள்  கரந்தையை  சுற்றியுள்ளன.

அவ்விடத்தில் இத்தனை நபர்கள் வந்து ஜீவசமாதி அடைவதற்கான காரணம் தான் என்ன என்று அதைப் பற்றிய தேடலில் ஈடுபடும் பொழுது, மராட்டிய மன்னர் சரபோஜி கட்டிய சரஸ்வதி மகாலில் உள்ள சில புத்தகங்கள் மற்றும் ஓலை சுவடிகளில், மராட்டிய மன்னர் ஒருவர் இறந்து போன பிறகு பல இடங்களில் அவருடைய அஸ்தியை கரைத்ததாகவும் அப்பொழுது ஒரே ஒரு அஸ்தி கலசம் மட்டும் மிஞ்சி போனதாகவும், அதை உத்திர வாகினி ஆக ஓடிக்கொண்டிருக்கும் வடாற்றில்  கரைக்கலாம் என்றும் முடிவு செய்து அவ்விடத்திற்கு வந்துள்ளனர். பின்பு ஆற்றில் அஸ்தியை கரைத்து கொண்டிருக்கும் பொழுது அந்த அஸ்தி ஆற்றில் தாமரை மலராக மலர்ந்ததாகவும் அந்நேரத்தில் வானத்தை அசிரிரி இவ்விடத்தில் மறிப்பவர்களுக்கு மங்களாலயம் சித்தி கிடைக்கும் என்று கூறி மறைந்துவிட்டதாகவும்  ஆகையால் தான் ஜீவசமாதி அடைபவர்கள் அங்கேயே வந்து அடைகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதைவிட சுவாரசியமாக அவ்விடத்தில் கிட்டத்தட்ட 600 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான். ஜீவ சமாதிகளும் வீடுகளும் அடையாளம் காண இயலா அளவிற்கு ஒரே மாதிரியாக உள்ளது. ஒவ்வொரு ஜீவ சமாதிகளை சுற்றியும் கிட்டத்தட்ட நான்கைந்து வீடுகள் உள்ளன

அங்கே இன்னும் பல குழிகள் தோண்டப்பட்டு நடப்பு நாட்களிலோ எதிர்காலத்திலோ ஜீவசமாதி அடைய பலர் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

 அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வளவுதான் முன்னேறினாலும் இதுபோன்ற சில செய்திகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இது இறைவனை சார்ந்ததா? அல்லது மூடநம்பிக்கை சார்ந்ததா? என்ற பெரும் கேள்வி நம்மிடையே குழப்பத்தை உண்டாக்கிறது. இத்தகைய மர்மமான  இடத்தை காண விரும்புவோர் தஞ்சை வழியாக கடந்து செல்லும் பேருந்தில் சென்று காணலாம்.

Photo credit: Harini Dineshkumar

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Comments

No comments to show.