By Harini Dineshkumar
காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் என்றாலே ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சித்தூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் கோவில் தான் நம் அனைவருக்கும் நினைவில் வரும், ஆனால் தமிழ்நாட்டில் தஞ்சையில் உள்ள நெட்டாற்றை தாண்டி 1600 வருட பழமையான காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் நுழைவாயில்
ஆம், தஞ்சையை அடுத்துள்ள சத்திரம் நெட்டாற்றை தாண்டி இக்கோவில் அமைந்துள்ளது. ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கோவிலைப் போல இக்கோவில் பராமரிக்கப்படவில்லை. செங்கல் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால் இக்கோவில் சுமார் 1600 வருடம் பழமையாக இருக்குமென்று கணிக்கப்படுகிறது.
கருவறையில் வீற்றிருக்கும் காளஹஸ்தீஸ்வரர்
கருவறையில் வீற்றிருக்கும் அம்பாள்
இக்கோவிலை ஹரி என்ற 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் தான் பராமரித்து வருகிறார்.
கோவிலை பராமரித்து வரும் 24வயது ஹரி என்ற இளைஞர்
கொரோனா பரவலுக்கு முன்பு இக்கோவிலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆனால் ஊரடங்கு காரணமாக அப்பணி பாதியிலேயே நின்று போனது.
முழுமை பெறாத சிலைகள்
முழுமை பெறாத பீடம்
இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள சுவர் மிகவும் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இக்கோயிலின் பின் வாசல் நுழைவாயிலில் மரக்கட்டைகள் அடுக்கி தடுக்கப்பட்டுள்ளன.
மரக்கட்டைகள் அடைக்கப்பட்டிருக்கும் கோவிலின் பின் வாயில்
கோவிலின் உட்புறங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. கண்ணாடி துகள்கள் நெகிழிக் குப்பைகள் மின்சாரம் சார்ந்த கழிவுகள் அனைத்தும் கோவிலை சுற்றி குவிந்துள்ளன.
அத்தோடு நில்லாமல் அவ்வூரில் வாழும் பல இளைஞர்கள் அக்கோவிலை உடற்பயிற்சி கூடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் உடற்பயிற்சிக்கு தேவையான பொருள்
அவ்விடத்தை சுற்றி வசிப்பவர்கள் தனது கால்நடைகளுக்கான கொட்டகையாகவும் இக்கோவிலை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இக்கோவிலில் வீற்றிருக்கும் காளஹஸ்தீஸ்வரர் மற்றும் அம்பாளுக்கு மாதத்திற்கு இருமுறை அதாவது பிரதோஷம் அன்று மட்டுமே பூஜை நடைபெறுவதாகவும் மற்ற நாட்களில் சரியான பாதுகாப்பு கூட இன்றி கோவில் திறந்து இருப்பதாகவும் கூறி அவ்வூர் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கோவிலை சென்று காண வேண்டும் என்று விரும்புவோர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து மூலம் இக்கோவிலை வந்தடையலாம்.
Photo Credits: Harini Dineshkumar
No responses yet