அடுக்கடுக்காய் கேக்குகளை செய்து வாழ்வில் முன்னேறிச் செல்லும் மங்கை

ஹரிணி ஜெகதீசன்

கனவு காணுங்கள் கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும் சிந்தனைகள் செயல்களாகும், என்பதற்கிணங்க சிறுவயது கனவிலிருந்து இன்று பல தொழில் முனைவோரை உருவாக்கியவர் தான் சென்னையை சேர்ந்த அஞ்சனா.நாம் வெட்டி அளிக்கும் கேக்கை இங்கு ஒருத்தர் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர் சிறுவயதிலிருந்தே சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் அவரது பாட்டியிடம் சமைக்கவும் கற்றுக் கொண்டார். அவர் மிகவும் நன்றாகவும், உணவுகளை சமைப்பார். அதோடு மட்டுமல்லாமல் வித விதமான கேக் செய்வதில் கைதேர்ந்தவர் ஆவார். அவருக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்குமாம், தற்போது அவர் கேக் தயாரிப்பு பயிற்சியாளராகவும், கேக் தொழிலை வெற்றிகரமாகவும் செய்து வருகிறார்.

இவர் சைவ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கேக்குகளில் முட்டை கலக்காமல் செய்ய கற்றுக்கொண்டார்.அவர் கேக்குகளை நன்றாக செய்து விற்பனை செய்யும் பொழுது அவரிடம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தாங்களும் கேக் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்ததாகவும் அத்தெருவில் உள்ள பெண்கள் அனைவரும் கேக் செய்ய நன்றாக கற்றுக் கொண்டு வீட்டிலேயே கேக் செய்து கொடுக்கும் தொழிலை ஒருபுறம் செய்து வருகிறார்கள். இதிலிருந்து வரும் பணம் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

முதலில் புதிதாக கேக் தயாரிக்கும் பயிற்சி மையத்தை ஆரம்பித்து ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு அதிகமான நபர்கள் வந்து இப்பயிற்சி மையத்தில் கலந்துகொண்டு கேக் தயாரிக்க கற்றுக்கொண்டனர். தற்பொழுது ஆயிரக்கணக்கானவர்களுக்கு மேலாக கேக் தயாரிக்கும் தொழிலை சொல்லிக் கொடுத்துள்ளார்.

முதலில் பயிற்சி அளிப்பவர்களுக்காக அவரது வீட்டின் மாடியில் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். போதிய இடம் இல்லாத காரணத்தினால் புதிதாக பயிற்சி இடம் கட்டி அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் தற்பொழுது கற்றுக்கொடுத்து வருகிறார். இவற்றிற்கெல்லாம் அவரது குடும்பத்தாரும், கணவரும் ஆதரவாக இருக்கிறார் என்று திருமதி அஞ்சனா கூறினார். 12 வருடங்களாக இந்த கேக் தொழிலை செய்து வருவதாகவும் கூறினார்.

“நான் 7 வயது குழந்தைகள் முதல் 60 வயது முதியோர்கள் வரை அனைவருக்கும் கேக் தயாரிக்க பயிற்சி அளிக்கிறேன், அதில் ஒரு சிலர் கேக் தயாரிக்கும் தொழிலை முழுநேரப் பணியாக மாற்றிக்கொண்டு பேக்கரி தொழில் செய்து வருகின்றனர். கேக் தயாரிக்க பயிற்சி அளிக்கும்   பொழுது உள்ள கேக்குகளை  ஆசிரமங்களுக்கு கொடுக்கும் பொழுது  ஏற்படும் மகிழ்ச்சியை அளவிட முடியாது” என்று அஞ்சனா கூறினார்.

இவர் 45 வகையான கேக்குகளை செய்கிறார், கேக்கிற்குத் தேவையான ஒரு சில பொருட்களை  (வெண்ணெய் , கோகோ பவுடர் )இராசாயனம் கலக்காமல் வீட்டிலே செய்து வருகிறார். அவரது தோழி மூலம் சமூக வலைத்தளங்களில் கேக் செய்து புகைப்படங்கள் இடுவதன் மூலம் அவரின் தொழில் மிகவும்  பிரபலமாகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் இவர்களிடம் கேக் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஞ்சனா தான் கற்றுக்கொண்ட வித்தையை மற்றவர்களுக்கும் கற்று கொடுத்து அவரவர் வாழ்க்கையை இப்படியும் கூட வாழலாம் என்ற ஒரு உத்வேகத்தையும்,காலம் மாறிப்போச்சு பெண்களும் தங்கள் தனித் தன்மைகளுடன் இவ்வுலகத்தை திரும்பிப்பார்க்க வந்தாச்சு என்ற உணர்வையும் அளிக்கின்றார்.

Edited by :Rieugleen R

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Comments

No comments to show.